Search This Blog

Saturday, 3 September 2022

💗அம்மா💗

                                                                                                               💗அம்மா💗     


                              💗ஊர் முழுவதும் பல நூறு கோயில்கள் இருந்தாலும் அம்மாவை  போல் ஒரு சாமி இல்லை!!!. சுமையாய் வந்த என்னை சுகமாய் ஏற்ற தாயே! உன்ன  உருக்கி என்னை வடித்த சிற்பி நீயே! ஆயிரம் முத்தங்கள் இட்டு, என்ன  அரங்கேற்றம் செய்தாய்! எனக்காக மட்டும் வாழும் என் அன்பு தாயே, இனி   எத்தனை பிறவி எடுத்தாலும் என் அன்னை நீயே!!!  தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது!!!  உயிருக்குள் அடைகாத்து! உதிரத்தை பாலாக்கி! பாசத்தில் தாலாட்டி! பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து! நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை!!  அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் அம்மா!!!💗😊😊

No comments:

Post a Comment