தவறாக உணர்ந்த நிலை
கங்கை நதிக்கரையில் கடந்துவிட்ட முன்னாளில்
இங்கிறைவன் இராமனுமாய் எழில் விளங்கும் சீதையுமாய்
வந்த விதம் குறித்தும் மகிழ் விழந்து சீதைமனம்
நொந்த விதம் குறித்தும் நூலறிந்து நரைகண்ட
குருஒருவர் மற்றவர்க்குக் கூறி விளக்கி நின்றார்
உரைமுடிய, மக்கள் எலாம் உபதேச வார்த்தைகளை
மறுபடியும் சிந்தித்த வண்ணம் மனை சேர்ந்தார்
குரல்ஒன் றெழும்பியது, கூட்டத்தார் மத்தியிலே!
இதுவரையில் பேசிநின்ற இராமனையும் சீதையையும்
இதயத்தில் உணர்த்திடுக எவர் அவர்கள் என்றிங்கே
என்னும் ஒரு கேள்வியினை எழுப்பிநின்ற தக்குரலே
என்னுடைய கோட்பாட்டை இடர்செய்து கெடுத்தனை நீ
எல்லாம் கடவுளென இயம்புகிலேன் விந்தையுற
சொல்லதிலே ஏதும் சுடரும் பொருள்இல்லை
என்று குருசொன்னார் என்றாலும் சொல்லலுற்றார்
எண்ணமிட வேண்டுகிறேன் இறைவன் அவன் உண்மை!
வண்ணமுறத் தோன்றுகிற மற்றவைகள் சூனியமே!
உண்மையைப்போல் தெரிந்தாலும் உலகம் வெறும் கனவே!
உண்மை- அது கடவுள்; ஒன்றே நிலைத்தது வாம்.
நான்எனப் துன்மையிலே நாயகன்தான்- வேறில்லை
ஒருகாலும் ஒருநாளும் ஒருமாற்றம் இல்லாமல்
இறைவனவன் எந்நாளும் இருக்கின்றான் சத்தியமாய்.
No comments:
Post a Comment