Search This Blog

Sunday 6 April 2014

வேட்டையாடி வருது

வேட்டையாடி வருது  

தலையெழுத்தை மாற்ற வருது
தலைதெறித்து ஆடி வருது
தலைவனுடன் சேர்ந்து வருது
தலைப்புச் சேதியாய் வருது ...!!

தலைகுனிந்து வணங்கி வருது
தலைதூக்க தேடி வருது
தந்திரமாய் பேசி வருது
தம்பட்டம் அடித்து வருது ...!!

அணிஅணியாய் திரண்டு வருது
அடுக்குமொழி வீசி வருது
அயர்வின்றி சுற்றி வருது
ஆரவாரத் தோடு வருது ...!!

சின்னங்களைத் தாங்கி வருது
சிங்காரமாய் கவர்ந்து வருது
சினம்பொங்கத் தாக்கி வருது
சிநேகமாயும் நெருங்கி வருது ....!!

வீதியிலே வேட்டி வருது
வெள்ளைசட்டை போட்டு வருது
மேளதாளத் தோடு வருது
மேகமதிர கத்தி வருது ....!!

எதிராளியைத் திட்டி வருது
எடுப்பாகத் திரண்டு வருது
கூட்டங்களைக் கூட்டி வருது
குத்தாட்டம் போட்டு வருது ....!!

கொடிகையில் ஏந்தி வருது
கொட்டுகொட்டி பாடி வருது
கழுத்தில்துண்டு அணிந்து வருது
சந்துபொந்தும் சுத்தி வருது ....!!

வாக்குகேட்டு நாடி வருது
வாய்ப்புபெற ஓடி வருது
வாகனத்தில் ஏறி வருது
வாக்குறுதி அள்ளித் தருது ...!!

வருது வருது வருது
தேர்தல் விரைவில் வருது ....!!
வருது வருது வருது
தேர்தல் விரைவில் வருது ...!!!

No comments:

Post a Comment