வாங்கிவைத்த வாழ்த்து அட்டைகள்
விரிந்து மலர்ந்த பூக்களுடனும்
தொடும் பொழுதே
பூவென உணரும் வகையில்....
வாங்கிவைத்த வாழ்த்து அட்டைகள்
அனுப்ப நினைத்தும்
அனுப்பாமல்
இன்னும் என்னிடமே.....!
அனுப்பிவைத்தால்
அன்னியமாகி விடுவோமோ...
என்று அஞ்சியஞ்சியே
அனுப்பாமல் விட்டவைகள் ஏராளம்.....!.
ஒருவேளை -
அனுப்பியிருந்தால்....
நம்மிருவரது அன்னியோன்யத்தையும்
அழுத்தமாய் சொல்லியிருக்குமோ...?
இருந்திருக்கலாம்
ஆனால்.....
நீ திருமணமாகிச் சென்றபின்
உனக்கான பிறந்த நாளின்போது
வாங்கி வைத்த வாழ்த்து அட்டைகள்
இன்னும் என்னிடமேதான் இருக்கிறது
என் பிரிய சகோதரியே....!
No comments:
Post a Comment