காதலில் நாங்கள்
நிறைந்துக் கிடக்கும் நிறங்களை
வேண்டாமென்றே நிழலிடையே பயணிக்கிறது
காதல்
உயிராக உலரும் உணர்வுகளை வேண்டுமென்றே
உறங்கச் சொல்லி எங்களிடையே நடைப்போடுகிறது
சில ஸ்பரிசம்
சாரலாய் சரியும் பார்வைகளில்
நூலிழையில் நுழைந்து மின்னுணர்வுகளை உண்டாக்கிறது
சில உரசல்
நிழலை நனைக்க தெரியாத நதியில்
மிதக்க தெரிந்த பறவையாய் பயணிக்கும் நாங்கள்
காதலர்கள் !
No comments:
Post a Comment