Search This Blog

Thursday, 13 February 2014

காதலர்   தினம்

காதலர்   தினம்

வாழ்தலில் இன்பம் பலவருவித்து
பூவுலகில் தனிநாள் தெரிவித்து
புலர்ந்ததே இன்று காதலர் திருநாள்
                                              
வருடா வருடம் மாசித் திங்களில்
வசந்தகால பனிக்குளிர் தன்னில்
மலர்கள் மலர்ந்து குலுங்கும் பொழுதினில்
மலர்ந்ததிந்த காதலர்   திருநாள்                                      

இழமைக் கால இனிமை நாளில்  
இதயக் கமலப் பூக்கள் தோளில்
இருவர் மனமும் இணைந்ததாலே
தெரிவில் எல்லாம் இழமைக்கூட்டம்

அன்புப் பரிசும் ஆசை முத்தமும்  
இன்ப பெருக்கால் இதயச் சுத்தமும்  
துன்பம் நீங்கி துயரம் மறப்பதும்
காதலர் தினத்தின் மகிமை அன்றோ

பெண்ணைப் படைத்த பிரமன் கூட
என்னை ஏன் தான் படைத்தானோ - அட
கண்ணை படைத்த இறைவன் பின்னர்
பெண்ணை ஏன்தான் படைத்தானோ

கண்ணையும் பெண்ணையும்
படைத்ததன் காரணம்  
காதலின் பின்பே புரிந்ததன்றோ - அது
காதலர் தினத்தில் தெரிந்ததன்றோ  

வெண்நிலா சிந்திய தண்ணொழி பாரீர்
பூ நகை சிந்திய   பூமியைப் பாரீர்
பொன்னகை அணிந்த பெண்ணினைப் பாரீர்
புன்னகை சிந்திய ஆண்தனைப் பாரீர்

எல்லா நகையும் ஒன்றாய் சேர்ந்ததால்
பூமியே இன்று புனிதனாள் ஆச்சு
கதிரவன் வீச்சால் காரிருள் போச்சு
கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தாச்சு

வேறென்ன வேண்டும் வேறென்ன வேண்டும்
ஒருசுகம் வேண்டும் புதியுகம் வேண்டும
பிறிதொரு சுகத்தை ஈழபூமி தரவேண்டும்
மறுபடி எமக்கெல்லாம் சுதந்திரம் வேண்டும்.

No comments:

Post a Comment