நம்பிக்கைப் பயணம்
ஒலிப்பான்களிடையே
புகுந்து புறப்படும்
நடுத்தரவர்க்க சாதுரியம்.
அலுவலக நேரத்தை
ஞாபகப்படுத்தும்
சாலையோர மணிக்கூண்டு கடிகாரம்.
நூல் பிடித்தாற்போல்
விரையும் வாகனங்களிடையே
அந்த அவசரத்திலும்
நினைவுக்கு வரும்
மளிகை, பால் பாக்கி கெடு.
கனவுக் கண்களிடையே
விழப்பார்க்கும்
கண்ணீர்த்துளிகளுடன்
"பீஸ் கட்டணும்பா" என்ற குழந்தை
முகம்.
நடைபாதை மனிதர்களுக்கு
இணையாய்
தவழ்ந்து செல்லும் வாகன
நெரிசல்களிடையே
விடியலின் கனவுடன் வெறித்தபடி
சிகப்புக் கம்பளத்தினுள்
காய்ந்தும் காயாமலும்
வெண்கோடுகளுக்குள் சிறைபட்டு
"அது"வான "அவன்"
வேகத்தைக் கட்டுப்படுத்தும்
சாலையோரக் காவலாளியாய்
காட்சிப் பொருளாய்
வெக்கையுடன் போட்டி போட்டு
வறண்ட மனதினை
வாட்டியெடுக்கும் பதுமைகளாய்
காட்சிகள்.
காய்ந்த உதடுகளில்
எங்கிருந்தோ வந்த
ஒரு துளி மழைத்துளி
சட்டென்று இடம்பிடிக்கும்.
No comments:
Post a Comment